ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர லண்டன் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

3 மாத காலம் லண்டனில் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படித்து வருகிறார். ஆகஸ்ட் 28ல் அவர் தமிழகத்தில் இருந்து லண்டன் சென்றார்.இம்மாதம் இறுதியில் அண்ணாமலை தமிழகத்திற்கு வரும் போது அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டமபர் மாதத்தில் தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றார். அக்டோபர் மாதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை அதன் தலைவர் விஜய் நடத்தினார். 2026 தேர்தல் கூட்டணி பற்றி இப்போதே பேச்சுகள் எழுந்து வருகிறது. கூட்டணிக்கும் ஆட்சி அதிகாரம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அண்ணாமலை தமிழகம் திரும்பும் போது தமிழக அரசியல் அரங்கில் நடைபெற்ற புது நகர்வுகள் பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்க வாய்ப்புள்ளது. அப்போது மீண்டும் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.