வடகோவை சிந்தாமணி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் சிக்னலில் வெகு நேரம் நிற்க வேண்டியது இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும்.
தற்போது அந்த ரவுண்டானா அமைந்த பகுதியில் 'உலகத்தை காப்பது இயற்க்கை... அத்தகைய வளத்தினை பேணிக்காக்க வேண்டியது மனிதனின் கடமை' என்பதை சித்தரிக்கும் வகையில் உலகம்-மரம்-மனிதன் என ஒன்றினைத்து தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் 24.12.2024 அன்று திறந்து வைத்தார்.