தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வர்த்தக மையத்தில், தமிழக அரசின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் நடைபெற்ற Umagine TN 2025 எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசுகையில் கோவையில் அரசு தனியார் கூட்டுமுயற்சி அடிப்படையில் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு பிரிவில் தகவல் தொழில்நுட்ப வளாகம் 2 மில்லியன் சதுரடியில் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.

ஏ.ஐ. தான் அடுத்த மிகப்பெரும் தொழில்நுட்பம் என இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், இந்த தொழில்நுட்பம் வளர்வதால், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது, மாறாக அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தமிழக தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.