கோவை மாநகரில் உள்ள காந்திபுரம் பகுதி அனுப்பர்பாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நூலகம் & அறிவியல் மையத்திற்க்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையத்தில் ஒரு விசாலமான வரவேற்பு அறை, அறிவியல் மையம், கோளரங்கம், விண்வெளி லிப்ட் லாபி, விண்வெளி லிப்ட், கலையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், தமிழ் புத்தகப்பிரிவு, பருவ இதழ்கள், போட்டி தேர்வுக்கான நூலகம், டிஜிட்டல் நூலகம், இன்குபேஷன் சென்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைகிறது. 2026 ஜனவரி மாதத்தில் இந்த நூலகம் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படும்.