தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் கோவை மண்டலத்தின் சார்பாக வார இறுதி நாட்களான சனி (19.08.2023), ஞாயிறு (20.08.2023) மற்றும் திங்கள்(21.08.2023) ஆகிய 3 நாட்களை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு சென்று மீண்டும் ஊர் திரும்பும் விதமாக ஏற்கெனவே இயக்கப் பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) முதல் இயக்கப்பட உள்ளன. 

சென்ற வாரத்தில் இயக்கப்பட்டதை விட இந்த வாரம் கூடுதலாக 10 பேருந்துகளை உயர்த்தி 60 பேருந்துகளாக கோவை மண்டல போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.