கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கலந்துகொண்டார். இந்த கூட்டம் மூலமாக கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 55 பேர் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
இந்த மனுக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கியவைகளாக இருந்தது.
அதிகபட்சமாக கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலம் பகுதியில் இருந்து 18 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோவை மேயரிடம் 55 பேர் கோரிக்கை மனு
- by CC Web Desk
- Feb 04,2025