கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேயரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 53 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இவற்றின் மீது கோவை மாநகராட்சி அதிகாரிகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.