டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தேர்வான 90 பேரில் 47 பேர் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் மாணவர்கள்! நிர்வாகம் பெருமிதம்
- by CC Web Desk
- Apr 10,2025
வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 90 காலிப்பணியிடங்களுக்கான 3 கட்ட தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சமீபத்தில் நடத்தியது.
இந்த தேர்வு எழுத 2.38 லட்சம் பேர் அனுமிதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என 3 கட்டமாக தேர்வு நடந்தது. கடந்த 3 நாட்களாக நடந்த நேர்முகத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. 190 பேர் பங்கேற்ற இந்த தேர்வில், 189 பேரின் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் தரவரிசைப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி கோவை கிளை தலைவர் அருண் செந்தில்நாதன் கூறியதாவது :-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 1 (துணை கலெக்டர் பணிகள்) நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அளவில் மொத்தம் 190 தேர்வர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர்.
சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற 121 மாணவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கு பெற்றனர். இத்தேர்வில் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 90 பேரில் 47 பேர் இந்த அகாடமியின் மாணவர்களாக உள்ளனர். இது தமிழக அளவிலான மொத்த தேர்ச்சி விகிதத்தில் 50% சதவீதத்திற்கும் மேலாகும்.
குறிப்பாக, முதல் 10 ரேங்க்களில் 5 இடங்களை இவர்கள் பிடித்துள்ளனர். கோவை கிளை மாணவர்களான லார்சன் இஸ்ரேல் (7வது ரேங்க்), மது வர்ஷினி (11வது ரேங்க்), ஹர்ஷா உண்ணி (13வது ரேங்க்) ஆகியோரின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. இதில் முதல் ரேங்கை கதிர் செல்வியும், 3 வது ரேங்கை ஹரி பிரியங்கா பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி பெற்ற தங்கள் மாணவர்களுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டது. அடுத்த குரூப்-1 & 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 14 முதல் கோவை கிளையில் தொடங்க உள்ளன.ஆர்வமுள்ளவர்கள் 7305951898, 9840702761 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
"போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் சிறந்த வழிகாட்டியாக நாங்கள் தொடர்ந்து இருந்து வருகிறோம் " என்று இந்த அகாடமி பெருமையுடன் தெரிவித்தது.