பெங்களூரு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருவதால் சேலம் ரயில்வே டிவிஷனிலிருந்து இயக்கப்பட்டு வரும் சில ரயில்கள் 92 நாட்களுக்கு அந்த ரயில் நிலையத்தில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த ரயில்கள்?
மும்பை லோக்மானியா திலக் - கோவை ரயில் (எண்: 11013), கோவை - லோக்மானியா திலக் ரயில் (எண்: 11014), பெங்களூரு - எா்ணாகுளம் ரயில் (எண்: 12677), எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் செப்டம்பா் 20ம் தேதி முதல் டிசம்பா் 20 ஆம் தேதி வரை 92 நாட்களுக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் நிற்காது.
இந்த தகவலை சேலம் ரயில்வே டிவிஷன் வழங்கியுள்ளது.