2025க்கான கோயம்புத்தூர் புத்தக திருவிழா வரும் ஜூலை 18 முதல் 27 வரை கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜூலை 19 முதல் 28 வரை இந்த புத்தக திருவிழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் 285 ஸ்டால்களில் நாடு முழுவதும் இருந்து காட்சி படுத்தப்பட்டது.

இதில் 75000 பேர் கலந்து கொண்டனர். அதில் 17,000 பேர் 224 பள்ளிகளை சேர்ந்தவர்கள். 71 அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். கல்லூரிகளை பொறுத்தவரை 62 கல்லூரிகளில் இருந்து 5000 மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இந்த நிகழ்வு மேலும் சிறப்பாக நடைபெறும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.