கோவை வெள்ளியங்கிரி மலையேற அனுமதி வழங்கியது வனத்துறை! எப்போது இருந்து எப்போது வரை?
- by David
- Jan 28,2025
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் சுயம்புவடிவில் காட்சி தரும் சிவபெருமானை தரிசிக்க 7 மலைகளை ஏற வேண்டும். இந்த ஆண்டு அவ்வாறு மலையேற வனத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறலாம். வழக்கம் போல மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு வெள்ளியங்கிரி மலையை ஏற பிப்ரவரி 12 முதல் மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டது. மலை ஏறி சென்றவர்கள் விட்டு சென்ற குப்பைகளை அகற்றும் பணி ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கியது. இந்த பணிகள் மூலம் குறைந்தது 7 டன் குப்பைகள் (அதாவது 7000 கிலோ) அகற்றப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்ட துணி வகை குப்பைகள் அதிகம் இருந்தது.
2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்த ஆண்டு மலையேரிய சூழலில் இந்த ஆண்டும் அதிக அளவில் மலை ஏற பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர்.