கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டல பகுதிகளில் உள்ள வரிவசூல் மையங்களில் 2024-25 நடப்பு நிதியாண்டின் வரிவசூல் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து நாட்களிலும் (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வரிவசூல் மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

எனவே, இவ்வசதியினை மக்கள் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறும், மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கமாறும், மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.