கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொது பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு செவாய்க்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக மேயரிடம் நேரடியாகவே வழங்க முடியும்.
இந்த கூட்டம் நாளை (28.01.2025) காலை 11.00 மணி அளவில்,மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கோவையில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுமா?
- by David
- Jan 27,2025