2025 குடியரசு தின விழா : எந்தப் பொருளாதார தடையும் இந்தியாவை அச்சுறுத்தாது - கே.பி.ஆர் கல்லூரியில் கர்னல் சஜீவ் பெருமிதம்
- by CC Web Desk
- Jan 26,2025
கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் சரவணன் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி, குடியரசு இந்தியாவின் வளர்ச்சிக்கு கேபிஆர் பொறியியல் கல்லூரியின் பங்களிப்பைப் பற்றி எடுத்துரைத்தார்.
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கர்னல் வி சஜீவ் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், முன்னர் இந்தியா இறக்குமதிகளை செய்து கொண்டிருந்த காலம் மாறி இப்போது இந்தியா 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தரமான இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது. இன்று இந்தியாவை எந்தப் பொருளாதார தடையும் அச்சுறுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு, தேசப்பற்றை பறைசாற்றும் மாணவ மாணவியரின் நடனம், டிரோன் சாகசம் மற்றும் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பாட்ட நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
மேலும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பாராட்டு மடல் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. குடியரசு தின விழாவில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.