கோவை மாநகராட்சிக்கு குடியரசு தினவிழாவில் விருது!
- by CC Web Desk
- Jan 25,2025
Coimbatore
முன்னாள் படை வீரா்களுக்கான 2024 கொடிநாள் வசூலில், கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூல் செய்தது. கொடி நாள் வசூலில் தமிழகத்தில் கோவை மாநகராட்சி தான் முதலிடம் பிடித்துள்ளது எனவும் இது மாநில அளவில் நிா்ணயித்த இலக்கை விட அதிகம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை ஆளுநா் மாளிகையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை மாநகராட்சிக்கு இதற்காக விருது வழங்கவுள்ளார்.