தமிழகத்தில் பிளாஸ்டிக் மாசினை ஒழிக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.

அந்த வகையில் கோவை மாவட்ட நிர்வாகம், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

முன்னதாக பேரணி உக்கடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி உக்கடம் பெரிய குளம் வரை நடைபெற்றது. மேலும், உக்கடம் பெரிய குளத்தின் சுற்றுப்புறங்களில் நெகிழிகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இப்பேரணியில், இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணா கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.