நீலகிரி கோடை திருவிழா அறிவிச்சாச்சு! இ- பாஸ் வாங்க மறக்காதீங்க
- by David
- Mar 18,2025
இந்த ஆண்டுக்கான நீலகிரி கோடை திருவிழா மே மாதம் 3ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்தார்.
அதன் படி, கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 13வது காய்கறி கண்காட்சி; கூடலூரில் மே 9 முதல் 11 வரை 11வது வாசனை திரவிய கண்காட்சி; ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10 முதல் 12 வரை 20வது ரோஜா கண்காட்சி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே 16 முதல் 21 வரை 127வது மலர் கண்காட்சி; குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 23 முதல் 25 வரை 65வது பழக்கண்காட்சி; குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல்முறையாக மே 30 முதல் ஜூன் 1 வரை 3 நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
நீலகிரிக்கு சுற்றுலா வருபர்வர்கள் இ-பாஸ் முறையில் ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெற்றுக்கொள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இ-பாஸ் பெற https://epass.tnega.org/ என்ற இணையதளத்தை மக்கள் பயன்படுத்தலாம்.
சென்ற ஆண்டு ஊட்டி மலர் காட்சியை மட்டும் கண்டுகளிக்க 1.5 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.