பிரபல பின்னணி பாடகி ஜோனிதா காந்தியின் கச்சேரி நேற்று கோவை கொடிசியா மைதானத்தில் பல தரப்பட்ட, பல மொழிகள் பேசும் கோவை மற்றும் அதன் சுத்துவட்டார பகுதி ரசிகர்கள் மகிழும் வண்ணம் நடைபெற்றது. 

 

 

பிரம்மாண்ட மேடையில்,கண்கவர் ஒளி விளக்குகள், ரசிகர்கள் ஆடி மகிழ 'ஃபேன் பிட்', மைதானம் முழுவதும் துல்லியமான ஒலி பெருக்கி வசதிகள் என கச்சேரி அம்சங்கள் இடம்பெற, நிகழ்வில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி தன் குரலால் ரசிகர்களை மகிழ்வித்தார் ஜோனிதா காந்தி.