கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதற்கு பின் பிப்ரவரி 14, 20,21 ,22,24,28 ஆகிய தேதிகளில் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
மார்ச் 1ம் தேதி மதியம் 2.05 மணிக்கு திருத்தேரோட்டம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி ராஜ வீதி தேர் நிலை திடலில் இருந்து புறப்படும்.
அதன் பின் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியா வீதி வழியாக தேர் மீண்டும் தேர்நிலை வந்தடையும்.