கோவை மாநகரில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் தேநீர்க் கடைகள் மற்றும் பேக்கரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகரக் காவல் ஆணையர் எம்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருவதன் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள டீ கடைகளும் பேக்கரிகளும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது.