கோவையின் இந்த பகுதியில் நாள் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் கலெக்டர்! எங்கே? எப்போது?
- by CC Web Desk
- Dec 20,2024
தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களில் ஒன்றான மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வுகாண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி,உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒருவட்டத்தில் தங்கியிருந்து அங்கேயே கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ளமக்களின் குறைகளைகேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும்,சேவைகளும், தங்குதடையின்றி சென்று அடைவதை உறுதி செய்யவேண்டும்.
இதனை முன்னிட்டு 26.12.2024 அன்று காலை 9 மணிமுதல் 27.12.2024 காலை 9 மணிவரை அன்னூர் வட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல் நிலைதுறை தலைமை அலுவலர்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும் ஆய்வின் போது சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும் அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
கோயம்புத்தூர் வடக்குவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமை அலுவலர்களால் 26.12.2024 அன்று காலை 11.00 முதல் 12.00 வரை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது. மற்றும் பிற்பகல் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனுஅளித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட 30 வருவாய் கிராமங்களில் நடைபெறஉள்ளது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அன்னூர் வட்டத்தில் உள்ள அனைத்துதுறை அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் "உங்களைத் தேடி,உங்கள் ஊரில்" என்ற திட்டத்திற்கேற்ப நன்கு விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்தி அரசின் அனைத்து திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
Content by : SMK