கோவை சரவணம்பட்டியில் செயல்படும் எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி அதன் 15வது ஆண்டு விழாவை மார்ச் 31ல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
பெங்களூரு பனியானோ ஹெல்த்டெக் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமர் கௌதம் சிறப்பு விருந்தினராகவும், கோயம்புத்தூர் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இயக்குநர் (தர பொறியியல் மற்றும் உத்தரவாதம்) ரமேஷ் கல்யாண் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் முதல்வர் S. சார்லஸ் அவர்கள் ஆண்டறிக்கையை கூட்டத்திற்கு வழங்கினார், அதைத் தொடர்ந்து எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் S. N. சுப்ரமணியன் தலைமை உரையையும், இயக்குநர் V. P. அருணாச்சலம் பாராட்டுரையையும் வழங்கினர்.
தொழில்நுட்ப இயக்குநர் S.நளின் விமல் குமார், “இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் டிசைன் திங்கிங், ஃபியூச்சர் டெக்னாலஜி மற்றும் தொழில்முனைவு” மற்றும் டிசைன் திங்கிங் ப்ராஜெக்ட் எக்ஸ்போ நினைவுச் சின்னத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.
தலைமை விருந்தினர் அமர் கெளதம் பேசுகையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எளிதாக்கும் முக்கிய பொறியியலில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். கௌரவ விருந்தினரான ரமேஷ் கல்யாண், மாணவர்கள் அவர்களின் வாழ்க்கையில் தைரியமான சவால்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளவும், வெற்றிகரமான வாழ்க்கைக்கு கலாச்சார விழுமியங்களைப் பின்பற்றவும் ஊக்குவித்தார்.
மாணவர்களின் சிறந்த கல்வி செயல்திறன் மற்றும் இணை பாடத்திட்ட செயல்பாடுகளுக்காக பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
நான்காம் ஆண்டு B.E (கணினி அறிவியல் & பொறியியல்) பயிலும் மாணவர் ராமலிங்கத்திற்கு சிறந்த அவுட் கோயிங் (BOG) மாணவர் விருது வழங்கப்பட்டது.