சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ்க்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை இடையே ஒரே நிறுத்தத்துடன் இயங்கும் விமான சேவையை விரைவில் துவங்க உள்ளது இந்திகோ நிறுவனம்.
தற்போது வெளியாகி இருக்கக்கூடிய தகவல்கள் படி ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்திலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படும் விமானம் சிங்கப்பூரில் இரவு 10.05க்கு வந்து அங்கு 6 மணி நேரம் ஹால்ட் ஆகும். அதன் பின்னர் அதிகாலை 4:15 க்கு மீண்டும் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு காலை 6:10க்கு கோவை வந்து சேரும்.
அதேபோல ஆஸ்திரேலியாவின் மற்றொரு நகரமான சிக்னியில் இருந்து மதியம் 3:55 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு இரவு 9 மணிக்கு வந்து சேரும். அங்கு 7 மணி நேரம் ஹால்ட் செய்யப்பட்ட பின்னர் காலை 4:15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 6:10 மணிக்கு வந்து சேரும்.
வாரம் எத்தனை முறை இந்த சேவை வழங்கப்படும் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.
சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா, கோவை இடையே விமான சேவையை துவங்க உள்ளது இந்திகோ நிறுவனம் - தகவல்
- by David
- Sep 03,2024