சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் 40 பள்ளிகள், 30 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் திறமையான இளம் ஹாக்கி வீரர்கள் அதிகப்படியாக உள்ளனர். 

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மாவட்டங்களான நீலகிரி, ஈரோடு, திருப்பூர். நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான இளம் ஹாக்கி வீரர்கள் உள்ளனர். 

 

இந்த மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த செயற்கை புல்வெளி ஹாக்கி ஆடுகளம் இல்லாத காரணத்தினால் போதிய பயிற்சி இல்லாமல் அபரிவிதமான திறமைகள் இருந்தும் ஹாக்கி வீரர்களால் அடுத்த கட்டத்திற்கு அதாவது உலக. தேசிய மற்றும் மாநில அளவில் நடக்கும் போட்டியில் மற்ற வீரர்களுக்கு இணையாக விளையாட இயலவில்லை.

 

எனவே. ஹாக்கி வீரர்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் தொடர்ச்சியான பயிற்சிகள் மேற்கொண்டு உலகத்தரமான போட்டிகளில் பங்கு பெறும் வகையிலும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 72க்கு உட்பட்ட மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 7.02 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சர்வதேச தரத்தில் அஸ்ட்ரோ டர்ப் (ASTRO TURF) எனப்படும் செயற்கை புல்வெளி மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ளது.

 

இந்த திட்ட பணிக்கு இன்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

 

ஹாக்கி மைதானத்தில் அமைக்கப்படும் வசதிகள்:-

 

6500 சதுர மீட்டர் பரப்பளவில் அஸ்ட்ரோ டர்ப் (ASTRO TURF) எனப்படும் செயற்கை புல்வெளி மைதானம்.

 

6 எண்ணிக்கையில் உயர் கோபுர மைதான ஒளிரும் விளக்குகள்.

 

உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பிட வசதி

 

350 மீட்டர் நீளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைத்தல்.

 

தகவல் : கோவை மாநகராட்சி