அதிமுக ஐ.டி. விங் தலைமை பொறுப்பு கோவை சத்யனுக்கு வழங்கப்பட்டது ! அப்போ 'சிங்கை' ராமச்சந்திரன்?
- by CC Web Desk
- Dec 25,2024
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐ.டி. விங்) தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழக மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் S.R. விஜயகுமார், Ex. M.P., அவர்களும், துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் C. மணிமாறன் அவர்களும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் சிங்கை G. ராமச்சந்திரன் அவர்களும், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் M. கோவை சத்யன் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
இதற்கடுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக S.R விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கழக புரட்சித் தலைவி பேரவை துணை செயலாளராக கோவிலம்பாக்கம் மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளார். கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.