சீனாவில் அதிக அளவு கொரோனா தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புது ஒமிக்ரான் வகையாக பார்க்கப்படும் BF.7 குறித்து நிறைய அச்சங்கள் உள்ளன. ஆனால் இதை நாம் ஏற்கனவே எதிர்கொண்டு உள்ளோம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது:
BF.7 கொரோனா வகைக்கு என்று தனியாக முன் அறிகுறி இல்லை.
தற்போது வரை இந்தியாவில் இந்த வகை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் குஜராத்தில் 2 பேர், ஒடிசாவில் இரண்டு பேர் தான்.
ஆனால் இந்தியாவில் இதைவிட அதிகமாக உள்ளது XBB எனும் கொரோனா வகை தான். தற்போது இதுதான் அதிகமாக நோய் தொற்றை ஏற்படுத்தும் வகையாக உள்ளது.
இதுவும் வழக்கமாக உள்ள அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றது.
BF.7 வகை கொரோனா இந்தியாவில் கடந்த ஜூலை மாதமே கண்டறியப்பட்டது, ஆனால் அது கொரோனா பாதிப்பை பெரிய அளவு ஏற்படுத்தவில்லை என்று செய்திகள் குறிப்பிடுகின்றன.
BF.7 வகை சீனாவில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் முன்பே 91 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.
அலட்சியமாக இல்லாமல் முக கவசம் அணிவதையும், அடிக்கடி கை கழுவுவதையும் நாம் அனைவரும் முறையாக செய்தால் இதை நிச்சயம் நம்மால் வெல்ல முடியும்!